சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, கீழ் அணுவம்பட்டு ஊராட்சி, காரப்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18.80 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய பள்ளி கட்டிடத்திற்கு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கே.ஏ.பாண்டியன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் இளவரசி ஆனந்தன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக அம்மா பேரவை துணை செயலாளர் பி.அருள், ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட கழக இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள், மு.முடிவன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜசேகர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசுகையில், சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் கீழ் அனுவம்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18.80 லட்சம் நிதியினை ஒதுக்கி இன்றைக்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், கிள்ளை நகர கழக செயலாளர் தமிழரசன், ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆறுமுகம், பாலு, ராமசந்திரன், கோதண்டராமன், மூர்த்தி, மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், தலைமை ஆசிரியர்கள் மரியாள், அங்கயர்கன்னி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment