தேமுதிகவில் வடலூர் நகரப் பகுதிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

தேமுதிகவில் வடலூர் நகரப் பகுதிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு.

தேமுதிகவில் வடலூர் நகரப் பகுதிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு


தேசிய முற்போக்கு திராவிட கழகம் அமைப்பு தேர்தல் கடந்த 21.09.2022 முதல் 25.09.2022 வரை ஒன்றியம், நகர ,பேரூர் பகுதி வட்டம் ஆகியவற்றிற்கு நடைபெற்றது.


இதில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் நகர நிர்வாகிகள் பட்டியல் தற்பொழுது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஒப்புதலின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது.



இதில் நகர கழகச் செயலாளராக S.ஜாகிர் உசேன் அவர்களும் நகர கழக அவைத் தலைவராக  I.பசுபதி அவர்களும் நகர கழக பொருளாளராக என் N.அர்ச்சுனன் அவர்களும் நகர கழக துணை செயலாளராக V.Rபன்னீர்செல்வம், S.கந்தசாமி R.ஏழுமலை, R.அஞ்சம்மாள் ஆகியோரும் மாவட்ட பிரதிநிதிகளாக S.வேல்முருகன், S.குமரவேல் சங்கர், B.சுரேஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகர கழக நிர்வாகிகளுக்கு தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று தலைமை கழக செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/