வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கல்.

வடலூர் நகராட்சிக்குட்பட்ட என்எல்சி ஆபிஸர் நகர் கடை எண் 8 ல் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 


தமிழ் அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இதன்  ஒரு பகுதியாக ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சர்க்கரை வெல்லம் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி வடலூர் நகராட்சிக்குட்பட்ட என்.எல்.சி ஆபிஸர் நகர் பகுதியில் உள்ள கடை எண் 8  ல் நகர் மன்ற உறுப்பினர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.


இதில் கடை எண் 8 விற்பனையாளர் ரவி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.. 

No comments:

Post a Comment

*/