பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விருத்தாசலத்தில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து வெண்கரும்பூர் பேருந்து நிறுத்தம் வரை 13 கிலோமீட்டர் போட்டி நடைபெற்றது. மினி மாரத்தான் போட்டியை விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன் பச்சை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஓட்டபந்தய வீரர்கள் பங்கு பெற்றனர்.
முதலாம் பரிசை சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஒட்டபந்தய வீரர் ஜெயபிரகாஷ் வென்றார். இவர் 13 கிலோமீட்டர் தொலைவை 40 நிமிடங்களில் அடைந்தார்.
இரண்டாம் பரிசை சேலம் மாவட்டம் சின்னப்பாபட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஹரன் பெற்றார்.
மூன்றாம் பரிசை கருவெப்பிலங்குறிச்சியை சேர்ந்த ராஜகிருஷ்ணன் பெற்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கான முதலாம் பரிசை வெண்கரும்பூர் ஆர்கே கன்ஸ்ட்ரக்ஷன் கருத்திருமன், இரண்டாம் பரிசை அலெக்ஸ் குரூப்ஸ் அலெக்ஸ் நெப்போலியன், மூன்றாம் பரிசை விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுரேஷ் ஆகியோர் வழங்கினர். சீருடை அன்பளிப்பை AGP பிரீமியர் குரூப்ஸ் அன்வர்பாஷா, எஸ்.டி மொபைல்ஸ் பாரதி ஆகியோர் வழங்கினர்.

No comments:
Post a Comment