திருவள்ளுவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 January 2023

திருவள்ளுவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை.


திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டை ஒன்றியம், மஞ்சக்குழி ஊராட்சி, சம்பந்தம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மூல நாதர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கே.ஏ.பாண்டியன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 



நிகழ்ச்சியில் அகத்தியர் ஃபவுண்டேஷன் நிறுவன தலைவர் டாக்டர்.ஈஸ்வர் ராஜலிங்கம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட கழக இணை செயலாளர் எம்.ரங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த்,கிள்ளை நகர கழக செயலாளர் தமிழரசன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ரங்கசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆனந்த ஜோதி சுதாகர், பாஸ்கர், கூட்டுறவு சங்க தலைவர் தன.கோவிந்தராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரி மகேஷ், நிர்வாகிகள் மகேந்திரன், பாலமுருகன், விஜயன், முத்துக்குமாரசாமி, பாலாஜி, கண்ணதாசன், ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/