விருத்தாசலம் திமுக நகரம் சார்பில் அமைச்சர் சி.வி.கணேசனுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 January 2023

விருத்தாசலம் திமுக நகரம் சார்பில் அமைச்சர் சி.வி.கணேசனுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு

விருத்தாசலம் திமுக நகரம் சார்பில் தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. 


விருத்தாசலம் திமுக நகர செயலாளர் தண்டபாணி, விருதாச்சலம் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், திமுக நகர கவுன்சிலர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் சார்பில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து சீர்வரிசை புறப்பட்டது. இதில் திமுக தொண்டர்கள் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கு பெற்றனர்.


அமைச்சர் இல்லத்தை அடைந்தவுடன், அமைச்சர் கணேசன் சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான நகர திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.


அமைச்சர் இல்லத்தில், சிலம்பம் சுற்றி கொண்டிருந்த தொண்டர் ஒருவரிடம் இருந்து அமைச்சர் சிலம்பத்தை பெற்று அமைச்சர் சில வினாடிகள் சிலம்பதை சுற்றினார். இதனை கண்ட திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

No comments:

Post a Comment

*/