புவனகிரியில் தமிழக ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர் கைது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

புவனகிரியில் தமிழக ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர் கைது

புவனகிரியில் தமிழக ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை  எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது




 கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் மினரல் மித்ரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட திராவிட கழகத்தினர்   ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்தில்     வெளியேற வெளியேறு ஆளுநர் ரவியே வெளியேறு  கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் ஆளுநர் ரவியை கண்டிக்கிறோம்  என்று முழக்கங்கள் இட்டப்படியே மறைத்து வைத்திருந்த ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை கொளுத்துவதற்கா எடுத்து வந்தனர். 


அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த  சிதம்பரம் ஏ .எஸ். பி. ரகுபதி ஐ.பி.எஸ் அவர்களின்  தலைமையில் சிதம்பரம் காவல் ஆய்வாளர்  ஆறுமுகம் குடபாலன்  புவனகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சந்தோஷ் ஆகியோர்கள்  திராவிடர் கழகத்தினரை எச்சரித்து  கொளுத்த முயன்ற ஆளுநரின் உருவ பொம்மையை   கைப்பற்றி பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு  கொண்டு சென்றனர். 


அதன் பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட கழகத்தினரை   கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்         ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் புவனகிரி பகுதியில் சிறிது நேரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

No comments:

Post a Comment

*/