நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததை விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 January 2023

நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததை விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கவயல் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததை கண்டித்தும் கலந்த கயவர்கள் மீது வன்கொடுமைதடுப்பு  சட்டத்தில் வழக்கு பதிய கோரி விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கவயல் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததை கண்டித்தும் கலந்த கயவர்கள் மீது வன்கொடுமைதடுப்பு  சட்டத்தில் வழக்கு பதிய கோரியும் தலித் கூட்டமைப்பு மற்றும் ஆதி அறக்கட்டளை நிறுவனர் திருமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் குடியரசு கட்சி தலைவர் திருவள்ளுவன் இந்திய குடியரசு கட்சி மாநில பொது செயலாளர் மங்காபிள்ளை பழங்குடி மக்கள் கட்சி துரைசெல்வராஜ், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் அய்யசாமி பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் பாக்யராஜ் ஆதி அறக்கட்டளை பொதுச் செயலாளர் வீரச்செல்வன் சேப்பாக்கம் பிரகாஷ் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் செய்தனர்.

No comments:

Post a Comment

*/