புதுக்கோட்டை மாவட்டம் கங்கைவல்லி கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலத்தை கலந்த்தையடுத்து கிராம மக்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலத்தை கலந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு இதுவரை யாரையும் கைது செய்யவில்லை
அதனை கண்டித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வீரானூர் நாகராஜன் தலைமை தாங்கினார் பறையர் பேரவையின் மாநில துணை துணை செயலாளர் இளையராஜா மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னில வைத்தனர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என் ஆர் ராஜேந்திரன் மற்றும் ஆதிதிராவிட மகாசான சங்க மாவட்ட தலைவர் கஸ்பா பழனிச்சாமி விவசாய சங்கத் தலைவர் விடி சேகர் ஆட்கொண்ட நத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
No comments:
Post a Comment