விருத்தாசலம் அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து . அமைச்சர் சி.வெ. கணேசன் நேரில் சென்று ஆறுதல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 January 2023

விருத்தாசலம் அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து . அமைச்சர் சி.வெ. கணேசன் நேரில் சென்று ஆறுதல்

விருத்தாசலம் அருகே அரசு பேருந்து  வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து . அமைச்சர் சி.வெ. கணேசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தில் சேப்பாக்கம் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பேருந்து 50ற்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலில் தலைகுப்புறாக  கவிழ்ந்தது.

 

விபத்தில் காயமடைந்த பயணிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு பணியில் விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.
பேருந்தை சரவணன் என்ற ஓட்டுநர் ஒட்டி வந்தார். தகவல் அறிந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ். தலைமை மருத்துவர் எழில் நகர  செயலாளர் தண்டபாணி. மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment