அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து மீட்பு - பணியில் அமைச்சர்
கடலூர் மாவட்டம் வேப்பூரையடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து தடம் எண் 22 அரசு பேருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து கோமங்கலம் அருகே வரும்போது ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளாகி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடை ந்திருந்தனர்.
அவ்வழியே சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருந்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டார்.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வசதி செய்து தரக்கோரியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்விடத்திலிருந்து மீட்பு பணியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment