ஜெயங்கொண்டான் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது !
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மேல்பவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டான் ஊராட்சியில் 74 .ஆவது குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் இ சேவை கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி விஜயரங்கன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருஞான குருசாமி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பற்றாளர் ஊர் நல அலுவலர் ராமானுஜம் அவர்கள் கலந்து கொண்டு கிராம பொதுமக்களுக்கு கிராம சபை கூட்டத்தின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கிராம வரவு செலவு கணக்குகள் சரி பார்த்தல் 2023 -2024 ஆம் ஆண்டுக்கான கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானம் நீண்ட நாள் கோரிக்கையான
1).ஜெயங்கொண்டான். பாளையம் இணைப்புச் சாலை அமைத்தல் .
(2).விவசாய நிலத்திற்கு செல்லும் எல்லை கன்னியை தூர்வாரி சாலை அமைத்தல்
(3)ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து மயானங்களிலும் சாலை வசதி மின் விளக்கு அமைத்தல்
(4)கிராமத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் பெண் குழந்தைகளின் நினைவாக ஊராட்சி முழுவதும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியாக ஊராட்சி செயலாளர் கருணாமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறி சிறப்பு கிராம சபையை நிறைவு செய்தார் .
No comments:
Post a Comment