கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மேல்பவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சியில் நாட்டின் 74 ஆவது குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ராமலிங்கம்ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்னக்கிளி இளந்திரையின் இவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர் பின்னர் கிராம சபைக் கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் கிராம பொதுமக்கள் தூய்மை காவலர்கள் என அனைவர்களும் பெரும் திரளாக ஆர்வமுடன் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியாக ஊராட்சி செயலர் பழனி இளங்கோவன் அனைத்துத் தீர்மானங்களையும் வாசித்துக் காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment