வடலூரில்விஷம் குடித்து, கட்டிட தொழிலாளி சாவு.
வடலூர் அருகே உள்ள தென்குத்து பிதாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சந்தோஷ்குமார் (41) இவர் கட்டிட தொழிலாளி இவருக்கு, குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது, இதனால் இவருக்கு இவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது, சம்பவத்தன்று இருவருக்கு சண்டை ஏற்பட்டதால் மனமுடைந்த சந்தோஷ்குமார் பூச்சிமருந்து குடித்தாக தெரிகிறது. இதனை அறிந்த உறவினர்கள் வடலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சந்தோஷ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள் சந்தோஷ்குமார் முன்னதாக இறந்துவிட்டதாக கூறினார்கள், இதுகுறித்து புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இறந்த சந்தோஷ்குமாருக்கு 2 ஆண்குழந்தையும், 2 பெண்குழந்தையும், உள்ளது.

No comments:
Post a Comment