கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள வண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்த. கலியமூர்த்தி மகன் நீலகண்டன் வயது 42, இவர் தமிழ்நாடு மின்சார வாரிய மங்களூர் பிரிவு அலுவலகத்தில் ஒயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்
ஜனவரி 10-ந் தேதி பணிமுடிந்து இரவு பணி முடிந்து டிஎண், 49,கே, 9201 என்ற எண்ணுள்ள ஹீரோ ஹோண்டா வாகனத்தில் இரவு 7 மணியளவில் மங்களூரிலிருந்து சேலம் சாலையில் வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வேப்பூர் கூட்டுரோடு பிரைம் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் தார்சாலை போடும் வாகனம் நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல் எதிர்பாராத விதமாக தார் வாகனத்தின் மோது நீலகண்டன் ஓட்டி வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தலையில் காயமடைந்த நீலகண்டனை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைகாக. பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவலறிந்த வேப்பூர் போலிசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.


No comments:
Post a Comment