வடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 27 வெங்கடக்குப்பம் நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
தமிழ் அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பை நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சர்க்கரை வெல்லம் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி வடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 27 வெங்கடக்குப்பம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நகர் மன்ற உறுப்பினர் அர்ஜுனன் அவர்கள் தலைமையில் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் பொங்கல் தொகுப்பினை பெற்று சென்றனர்.

No comments:
Post a Comment