சிதம்பரத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டுசாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் பற்றிய விழிப்புணர்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

சிதம்பரத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டுசாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் பற்றிய விழிப்புணர்வு.

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிதம்பரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில்  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் பற்றிய விழிப்புணர்வை வட்டார போக்குவரத்து அதிகாரி அவர்களும், வட்ட சட்ட பணிகள் குழு  உறுப்பினர் வழக்கறிஞர் திருமதி R. திவ்யா அவர்கள்  சாலை விதிமுறைகள் குறித்தும் இலவச சட்ட உதவி பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


மேலும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களிடையே சாலை விதிமுறைகள் குறித்து உறுதிமொழி மேற்கொள்ள வைத்தார்.  இதில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வலர் கலைவாணன் மற்றும் ஞானசௌந்தரி  பொதுமக்களிடையே துண்டுபிரசுரம் வழங்கினார்கள். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வந்த பொதுமக்கள் பயனடைந்தனர்.

No comments:

Post a Comment

*/