கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் கோமங்களம் கிராமத்தில் நடைபெறும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் வயல் வெளிகளில் வரப்பு மடிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு பணி செய்யும் பணியாளர்களிடம் பணி நடைபெறும் வேலை நாட்களில் பதிபெட்டில் கையொழுத்து இட வேண்டும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து கொடுக்கூர், பெரம்பலூர் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியினையும் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் நெல் களம் மற்றும் ஜேஜேஎம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆய்வு. இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதிகா, தண்டபாணி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment