தமிழக வாழ்வுரிமை கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழா - கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 January 2023

தமிழக வாழ்வுரிமை கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழா - கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் நிறுவன தலைவர், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் ஒப்புதலின் பேரில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றியம் நொச்சிக்காடு கிராமத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், கடலூர் மாமன்ற உறுப்பினருமான பொறியாளர் தி.கண்ணன் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கருணாமணி வரவேற்றார் மாவட்ட தலைவர் ஆர்.வி.சுந்தர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.  மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் சதாசிவம் ஒன்றிய செயலாளர்கள் சுப்பு, ரிச்சர்ட் தேவநாதன், சிவபிரகாஷ் மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குடிகாடுவெங்கட், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் நவீன், சதிஷ், சபா சுந்தர் பிரபாகரன் சீனுவாசன், மற்றும் கட்சியின் தொண்டர்கள் கலந்துகொண்டனர். 
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சந்தானக்கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*/