கடலூர் மாவட்டம் மங்களூர் வடக்கு ஒன்றிய சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
தொண்டாங்குறிச்சி, கழுதூர், அரியநாச்சி, சிறுகரம்பலூர் கிராமங்களில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கும் விழா தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தொடங்கி வைத்தார்.
மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் KNT.சுகுணா சங்கர்,ஆடரி சின்னசாமி ,மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம்,மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆட்மா குழு தலைவர் செங்குட்டுவன்,திட்டக்குடி நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் VPP.பரமகுரு,திட்டக்குடி நகர் மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், அனைத்து ஊர்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள்,திட்டக்குடி இளைஞர் அணி அமைப்பாளர்சேதுராமன், ஆக்கனூர் இளைஞர் அணி பாரதிராஜா, ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள்,இளைஞர் அணி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment