மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் அவர்களின் நினைவிடத்தில் பரங்கிப்பேட்டை திமுக ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகள் வீரவணக்கம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 January 2023

மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் அவர்களின் நினைவிடத்தில் பரங்கிப்பேட்டை திமுக ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகள் வீரவணக்கம்

தமிழ் மொழி பாதுகாப்பு போராட்டத்தில் ஜனவரி 25ல் வீர மரணம் அடைந்த மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் அவர்களின் நினைவிடத்தில் பரங்கிப்பேட்டை திமுக ஒன்றியம் மற்றும் நகர நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்தினார்கள்

கடலூர் மாவட்டம் . பரங்கிப்பேட்டை ஒன்றியம் மற்றும் நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ் மொழி பாதுகாப்பு  போராட்டத்தில் 1965 ஆண்டு ஜனவரி 25 ல் வீர மரணம் அடைந்த  கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  பரங்கிப்பேட்டை மொழிப்போர் தியாகி ராஜேந்திரன்  அவர்களின் நினைவிடத்தில்  மாலை அணிவித்து மலர்கள் தூவி வீரவணக்கம்  இன்று திமுக  நகர செயலாளர் AR. முனவர் உசேன் தலைமையில் நடைபெற்றது . 

இதில் MS. முஹம்மது யூனுஸ் , சங்கர், பாண்டியன் முன்னிலை வகித்தனர் கழக ஒன்றிய செயலாளர் ER.முத்து பெருமாள் சிறப்பு அழைப்பினராக கலந்து கொண்டு மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மௌன அஞ்சலி  செலுத்தி வீர வணக்கம் செய்தனர் இதில்  கவுன்சிலர்கள் ஜாபர், அஜிஸ், ஜாபர் சரிப், ஆனந்தன், உசேன், தங்கவேலு, நட்ராஜ்,அப்துல் முனாப், கலீல், மற்றும் சமூக ஆர்வலர் நிஜாமுதீன் கழக உறுப்பினர்கள்  நகர இளைஞர் அணி செயலாளர் கலந்து கொண்டு  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். 


சாதிக் அலி செய்தியாளர்

No comments:

Post a Comment

*/