நெய்வேலி அடுத்த இந்திரா நகர் பகுதியில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து வரும் வாகன ஓட்டிகள்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த இந்திரா நகர் பகுதியில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது
விடியோ:- 🔽https://tinyurl.com/2q25rttx
இந்நிலையில் அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் ஒருபுறம் இருந்து மற்றொரு புறம் உள்ள சாலைக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையில் நடுவே கொட்டப்பட்டுள்ள செம்மண் குன்றின் மீது ஏறி ஆபத்தான முறையில் சாலையை கடந்து வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் சாலையை கடக்க முற்ப்படும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர்.
எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கை ஆக உள்ளது
No comments:
Post a Comment