புவனகிரி அருகே கார் மோதி ஒருவர் பலி. நண்பரை பார்க்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 January 2023

புவனகிரி அருகே கார் மோதி ஒருவர் பலி. நண்பரை பார்க்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்.

புவனகிரி அருகே கார் மோதி ஒருவர் பலி. நண்பரை பார்க்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம். 


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்(55). இவர் இருசக்கர வாகனத்தில் சேத்தியாத்தோப்பு பகுதியை நோக்கி நண்பரை பார்க்கச் சென்றதாக கூறப்படுகிறது.  சென்றுக்கொண்டிருந்த போது பாழ்வாய்க்கால் பகுதியில் பின்னால் சாலையில் 


வந்த கார்  எதிர்பாராமல் இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஏகாம்பரம் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏகாம்பரம் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். நண்பரை பார்க்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் இக்கிராமத்தினர் பலரையும் வேதனையடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment

*/