காணாமல் போன மனைவியும், குழந்தையும் கண்டுபிடித்து தரக் கோரி காவல் நிலையத்தில் கணவர் புகார்
கடலூர் மாவட்டம் லட்சுமணாபுரம் கிராமத்தில் வசித்து வரும் ராமர் மனைவி கவிதா(30),நிகழினி(1)வயது இருவரும் இரண்டு நாட்களாக காணவில்லை கணவர் ராமர் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார்.
இருவருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தைக்கு 7 வயதும், இரண்டாவது குழந்தைக்கு 1 வயது ஆகின்றது.
கடந்த 23/01/2023 தேதி காலை வேப்பூர் அருகே ஆ.மரூர் கிராமத்தில் வசித்து வரும் அவருடைய பெற்றோரை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்று உள்ளார். கடந்த இரண்டு நாட்களாக வீடு திரும்பவில்லை என ராமநத்தம் காவல் நிலையத்தில் கவிதாவின் கணவர் ராமர் புகார் தெரிவித்துள்ளார். ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment