கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாலை விரிவாக்கப் பணிக்கு மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக அளவில் செல்கின்றன. இந்நிலையில் புவனகிரி- குறிஞ்சிப்பாடி சாலையில் புவனகிரி நோக்கி அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரி ஒன்று ஓட்டுனரின் தூக்கக் கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி புளிய மரக்கிளையை முறித்துக் கொண்டு கல்லறை தோட்டத்திற்குள் புகுந்தது.
அப்பகுதியில் குறைவான வாகன நடமாட்டம், மக்கள் நடமாட்டம் இருந்ததால் உயிர் ஆபத்துகள் தவிர்க்கப்பட்டது. இச் சம்பவம் புவனகிரி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனரக லாரி ஓட்டுனரிடம் புவனகிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதிவேகத்தில் லாரி மோதியதால் அங்கே கல்லறை தோட்டத்தில் இருந்த சில கல்லறைகளும் உடைத்தெறியப் பட்டு சேதமானது.
இப்பகுதியில் நூற்றுக்கணக்கில் மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் மோசமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் லாரிகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்குப் போதிய ஓய்வு இல்லாததால் இது போன்று தூக்கக் கலக்கத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன என்று விபரம் அறிந்த அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment