புவனகிரியில் ஒரே நாளில், ஒரே இடத்தில் இரண்டு விபத்து இரண்டு உயிர்ப்பலி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 January 2023

புவனகிரியில் ஒரே நாளில், ஒரே இடத்தில் இரண்டு விபத்து இரண்டு உயிர்ப்பலி



புவனகிரியில் ஒரே நாளில், ஒரே இடத்தில் இரண்டு விபத்து இரண்டு உயிர்ப்பலி



கடலூர் மாவட்டம், புவனகிரி பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் காலையில் பெரியசாமி(83)என்ற முதியவர் சாலையை கடந்து டீ கடைக்குச் சென்றபோது சுற்றுலா பேருந்து மோதி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்த சோகம் இருந்து வரும் நிலையில் இதே இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த மிராளூர் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் -பிரேமலதா(25) தம்பதியினர் அவர்களின் 3 வயது ஆண் குழந்தை ஆகியோர் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது சாலை விரிவாக்க பணிக்காக மண் ஏற்றிச்சென்ற கனரக லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பிரேமலதா எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்தார்.


தற்போது கனரக லாரி அவர் மீது ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அப்போது சாலையில் விழுந்த குழந்தையை தந்தை கலையரசன் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியதால் 3வயது ஆண்குழந்தை மற்றும் தந்தை கலையரசன் ஆகியோர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.



தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஒரே நாளில் ஒரே இடத்தில் ஏற்பட்ட இரண்டு விபத்துக்கள், இரண்டு உயிரிழப்புகளால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.



புவனகிரி நகர கடைத் தெருவானது சாலை குறுகியதாகவும், வாகன நெருக்கடிகள் அதிகம் உள்ளதாகவும் இருந்து வருகிறது.மேலும் விபத்து நடந்த இடமானது புவனகிரி பரங்கிப்பேட்டை விரிவாக்கசாலைப் பணி முடிந்து ,நகர சாலைத் தொடங்கும் இடமாக இருந்து வருகிறது. அதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காமல் வருவதாலும் சாலை குறுகியதாக இருப்பதாலும் இந்த விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதியினர் வேதனையோடு தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

*/