பண்ருட்டி, கண்டரக்கோட்டை பகுதியில் ஆற்று திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 January 2023

பண்ருட்டி, கண்டரக்கோட்டை பகுதியில் ஆற்று திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி, கண்டரக்கோட்டை பகுதியில் ஆற்று திருவிழா இன்று  வெகு விமரிசையாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகையொட்டி வரும் தை 5 ம் தேதி ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆற்று திருவிழா  இன்று நடந்தது. தென்பெண்ணையாறு கடலுார், விழுப்புரம் மாவட்டத்தின் மைய பகுதியாக உள்ளதால், இரு மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம கோவில்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 

ஆற்று திருவிழாவையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ராட்டினம் போன்ற பொழுது போக்கு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் புதிய கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.பன்னீர் கரும்பு, சிறுவள்ளிக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு,  விற்பனை அமோகமாக நடைபெற்றது. லாரிகளில் வாழைப்பழம் கொண்டுவரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. 

பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலுார், விழுப்புரம் மாவட்ட போலீசார் செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. பண்ருட்டி நகரம், ஒன்றிய மற்றும் விழுப்புரத்தில் கள்ளிப்பட்டு அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள 40 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/