சிதம்பரம் அருகே உள்ள பூவாலை அரசு உயர் நிலை மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை வகித்து பேசினார். ஆசிரியர் சமாரிமுத்து வரவேற்றார்.
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். பல்வேறு அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வாழ்த் துரை வழங்கினர். நிகழ்ச்சியை ஆசிரியர் பெரியசாமி தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் .கீதா, கசுதா ஆகியோர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்தனர்.
விளையாட்டு, கலைக்கழக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் கலை வாணி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment