விருத்தாசலம் ஆயியார்மடம் தெரு தமிழேந்தி மகன் அன்புச்செல்வன் (18),காமராஜ் நகரை சேர்ந்த ராமதாஸ் மகன் சன்முகம் (18), ஜனார்த்தனன் (18) ஆகிய மூவரும், விருத்தாசலத்தில் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி காரில் இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளனர்.
அப்போது மணலூர் என்ற இடத்தில் எருமனூர் பாலத்திலிருந்து வேப்பூர் செல்ல காரை திருப்பிய போது, எதிர்திசையில் கள்ளகுறிச்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்து, ரயில்வே மேம்பாலம் அருகே கார் மீது பலமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த மூவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கபட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்து குறித்து மணலூர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, விபத்து நடந்த இடத்தில் வேகத்தடைகளோ, பேரிகார்டுகளோ அமைக்கப்படாமல் இருப்பதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கூறினார். மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கிய இடமாக இருப்பதால் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது எனவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் பேரிகார்டு , வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment