தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவரும் 2023 இல் பொங்கல் பண்டிகையினை மகிழ்ச்சியுடன் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000/- ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு 01.12.2022 தேதியில் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 2021 ஆம் மாதத்தில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், அந்தியோதயா அன்னயோஜனா அட்டைகள், காவல்துறை அட்டைகள், முதியோர் உதவித் தொகை, அன்னப்பூர்ணா திட்ட பயனாளிகள் மற்றும் இலங்கை அகதிகள் ஆகிய 774027 குடும்ப அட்டைகளுக்கு இன்று முதல் வழங்கப்படவுள்ளது.
கடந்த 03.01.2023 முதல் 08.01.2023 முடிய ஒவ்வொரு நியாய விலைக் கடை பணியாளர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடும்ப அட்டைகளினை கணக்கிற்கொண்டு வரும் 12.01.2023 வரை 4 நாட்கள் வழங்கிட ஏதுவாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும் எந்த தேதியில் எத்தனை மணிக்கு வரவேண்டும் என குறிப்பிட்டு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளின் வெளியே பொதுமக்கள் அறியும் வண்ணம் 09.01.2023 முதல் எந்தந்தெந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தெந்த தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற விபரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படிருக்கும். மேலும் 09.01.2023 முதல் 12.01.2023 தேதியில் வாங்கத் தவறியவர்களுக்கு 13.01.2023 அன்று வழங்கிட ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ பச்சரிசி ரூ.35.20ம், ஒரு கிலோ சர்க்கரை ரூ.39.27ம், ஒரு முழு கரும்பு ரூ.33ம் (வெட்டுதல், கட்டுதல், ஏற்றுக்கூலி, இறக்குகூலி மற்றும் போக்குவரத்து கட்டணம் உட்பட) மற்றும் ரூ.1000/- ரொக்கபணமும் ஆக மொத்தம் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.1107.47 என்ற முறையில் கடலூர் மாவட்டத்திற்கு சுமார் ரூ.85 கோடியே 72 இலட்சத்து 12 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பொங்கல் பரிசு மின்னணு குடும்ப அட்டை மூலமாக தான் வழங்கப்படும். பொங்கல் பரிசினை பெற குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள எவரேனும் ஒருவர் டோக்கன் வழங்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறு குடும்ப அட்டை இல்லாத இனங்களில் அவர்களுக்கு ஏற்கனவே உள்ள e POS Device மூலமும், இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவுத்தாளில் குறிப்பிடப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்திட விநியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து 975 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலை கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர் மின்வெட்டு இல்லாவண்ணம் செயல்பட தமிழ்நாடு மின் பகிர்மான கழக கண்காணிப்பு பொறியாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணி செவ்வனே நடைபெறுவதை ஆய்வு செய்திட வட்ட அளவில் 10 துணை அட்சியர்களும், வட்ட அளவில் 13 வட்டாட்சியர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு 39 துணை வட்டாட்சியர்கள், 15 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் 32 வருவாய் ஆய்வாளர்கள் என மொத்தம் 109 அலுவலர்களினை பொறுப்பு அலுவலர்களாக நியமித்து நடமாடும் கண்காணிப்புக்குழு மூலம் கண்காணிப்புப் பணி செய்யப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவ அலுவலகங்களில் புகார் மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகர மேயர் திருமதி.சுந்தரிராஜா மாநகர துணை மேயர்.தாமரைச்செல்வன் அவர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வே.நந்தகுமார் , மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், கோ.உதயகுமார் , கடலூர் மாநகர திமுக செயலாளர் கே எஸ் ராஜா மாமன்ற உறுப்பினர்கள் பிரசன்னா, விஜயலட்சுமி செந்தில்,மு.சரிதா, அருள் பாபு,சுபாஷினி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.


No comments:
Post a Comment