சேத்தியாத்தோப்பில் எம்ஜிஆரின் 106வது பிறந்த நாள் விழா
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் முன்னாள் முதல்வர் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சேத்தியாத்தோப்பில் உள்ளஅதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் நகரகழகச் செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன்எம்ஜிஆரின் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அத்துடன் ராஜீவ் காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஆளுயர படத்திற்கும் மாலை அணிவித்தபின் கழகத் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
![]() |
இந்நிகழ்ச்சியில் தெய்வ.ராஜகுரு, நன்மாறன், எஸ் கே செல்வராஜ், மதியழகன், கோழி கோவிந்தசாமி, ஸ்ரீதர், குணசேகரன், ராமலிங்கம், சங்கர், சம்பத்கோபால், அண்ணா பிரபாகரன், பாலு, திலீபன், கணேசன், லலிதா பாலகுரு, மாரியப்பன், ரவி, பாலசுந்தரம், மகேந்திரன் மற்றும் நகர, கிளை நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment