காணும் பொங்கலன்று கலை நிகழ்ச்சியில் தகராறு - முதியவர் குத்திக் கொலை : புவனகிரி அருகே பத்து பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 January 2023

காணும் பொங்கலன்று கலை நிகழ்ச்சியில் தகராறு - முதியவர் குத்திக் கொலை : புவனகிரி அருகே பத்து பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

காணும் பொங்கலன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் முதியவர் குத்திக் கொலை. புவனகிரி அருகே பத்து பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்



கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வடக்கு பகுதியில்  ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். காணும் பொங்கலை முன்னிட்டு  அவர்கள் பகுதியில் விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென ஏற்பட்ட பிரச்னை காரணமாக கருணைநாதன் மகன் மோகனசுந்தரம் மற்றும் நேதாஜி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியது.



இதனால் கலை நிகழ்ச்சி மேடையில் பிரச்சனை ஏற்பட்டு மேடை அடித்து நொறுக்கினர். அங்கு வந்த போலீசார் பிரச்சனையை சரி செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர். பிறகு ஆத்திரம் தீராத  நேதாஜி அவருடைய ஆட்களை கூட்டிச் சென்று கருணை நாதன் வீட்டில் உள்ள கருணைநாதன் மனைவி, மகன்கள் அனைவரையும் அடித்து உள்ளனர்.


பிறகு வெளியே வந்த நேதாஜியும் அவருடைய ஆட்கள் பத்து பேர் சேர்ந்த கும்பல் அப்போது அங்கு எதிரே வந்த கருணைநாதனை கட்டையால் தாக்கினர்‌‌.மேலும் ஆத்திரம்்தீராமல்   கத்தியால் நான்கு இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். தகவல் அறிந்து வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி தலைமையான போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய பத்து பேர்  கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.



No comments:

Post a Comment

*/