கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் தொழில்த் துறை அமைச்சர் எம் சி சம்பத் தின் உதவியளராக மேல் குமாரமங்கலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் நேர்முக உதவியாளராக இருந்து வந்தார் இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை உள்ளதாக தெரிகிறது.
இந் நிலையில் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத்தின் அண்ணன் எம் சி தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமாரின் மாமனார் ராமச்சந்திரன் மற்றும் குமாரின் மாமியரை அந்தப் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதில் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பண்ருட்டி போலீசார் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் அவரது சகோதரர் தங்கமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர் இத்தகவல் அறிந்த அதிமுகவினர் கடும் கொந்தளிப்படைந்தனர் மேலும் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருவதால் எந்தவித விசாரணையும் இன்றி முன்னாள் அமைச்சர் சம்பத் உள்பட பலர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என கடும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சீமாட்டி சிக்னல் அருகே அதிமுகவினர் கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத்தின் மகன் பிரவீன் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி. ஜெ.குமார் ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், கந்தன் ஒன்றிய குழு தலைவர் தெய்வ.பக்கிரி, ஆர்.வி ஆறுமுகம் மீனவர் அணி தங்கமணி அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன் பகுதி செயலாளர்கள் முதுநகர் கந்தன், கெமிக்கல் மாதவன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், வினோத் தங்கராஜ் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஏ.ஜி தர்ஷனா இலக்கிய அணி ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன் கிரிஜா செந்தில் குமார் , மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன், வெங்கடேசன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பெருமள திரண்டு திரண்டனர் பொய் வழக்கு போடும் திமுக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக அரசையும் பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரையும் கண்டித்து கண்டன கோஷம் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லை என்றால் பொய் வழக்கை வாபஸ் பெரும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோமான அ.தி.மு க வினர் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டால் அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்வோம் என்று காவல்துறை கூறியதன் பேரில் அனைவரும் கலந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
No comments:
Post a Comment