கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 January 2023

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.


இவ்விழாவில் மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி செந்தில், செந்தில் குமாரி இளந்திரையன், சரவணன் , அருள் பாபு,எம்.ஆர்.பாலசுந்தரம், பார்வதி, சுதா அங்கநாதன்,  சுபாஷினி ராஜா, மகேஸ்வரி விஜயகுமார், சசிகலா ஜெயசீலன், மு .சரிதா, தா. சங்கீதா, சங்கீதா செந்தில்குமார் , அலுவலக வளாகத்தில் புதுப் பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் குரல் எழுப்பினார்கள்.

மேலும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி செயல் பொறியாளர் மகாதேவன் கே எஸ் ஆர் கார்த்தி கே எஸ் ஆர் பாலாஜி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/