கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் தங்களிடம் கூடுதலாக உள்ள உடைகள் போர்வைகள் ஆடைகளை கடலூர் அரசு மருத்துவ மனைக்கு வரும் ஏழை எளியவர்கள் ஆதரவற்றவர்கள் நோயாளிகள் பெற்றுக்கொள்கிற வகையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ ஆர் டி மையத்தில் அன்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை, ஏ ஆர் டி மையம், இளம் கடலூர் தொண்டு அமைப்பு ஆகியன இணைந்து அன்பு சுவரினையும் அதற்கான திட்டத்தையும் உருவாக்கியிருந்தன.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நடராஜன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிலைய மருத்துவர் பாலகுமரன் முன்னிலை வகித்தார். இளம் கடலூர் தொண்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வனிதா வரவேற்றார்.
மருத்துவர் ஸ்ரீதரன் ஏ ஆர் டி மைய அலுவலர் மருத்துவர் தேவ் ஆனந்த், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் இராச.வேலுமணி எச்ஐவி உள்ளோர் சங்க செயலாளர் சிவசிலன்.ஆலயங்கள் சுற்றுச்சூழல் அலுவலர் சாய் கிருஷ்ணன், நட்பு மேகங்கள் அமைப்பின் தலைவர் நல். முருகானந்தம், கல்லூரி மாணவர் சுப ஆதவன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
அரசு மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் தங்களிடமிருந்த கூடுதல் ஆடைகளை அன்பு சுவரில் அடுக்கி வைத்திருந்தனர். மருத்துவமனையில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த முதியவர்கள் அன்பு சுவரை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான ஆடைகளை மகிழ்வுடன் எடுத்துக் கொண்டனர்.
இத்திட்டம் கடலூர் அரசு மருத்துவமனையில் மேலும் விரிவு படுத்தப்படும் என்று கண்காணிப்பாளர் டாக்டர் நடராஜன் தெரிவித்தார்.
பட விளக்கம்
கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் அன்பு சுவரினை கண்காணிப்பாளர் டாக்டர் நடராஜன் திறந்து வைத்தார். அருகில் டாக்டர்கள் பாலகுமரன், ஸ்ரீதரன், தேவ் ஆனந்த், இளம் கடலூர் வனிதா உள்பட பலர் உள்ளனர்.

No comments:
Post a Comment