இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாளர் உத்தரவுப்படி விடுபட்ட இருளர் இன மக்கள் அனைவருக்கும் ஜாதி சான்று, வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வலியுறுத்தியும் இருளர்கள் மீது பொய் வழக்கு சுமத்தி சித்திரவதை செய்து சிறையில் அடைத்த காவல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்சி .எஸ்டி .வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்து
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் ஆறுமுகம் அவர்கள் தலைமை வகித்தார் முகாம் செயலாளர் கணேசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
தொட்டி தோப்பு சுகாந்திரம், சண்முகம், சசி, தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சி.பி.எம் மாநில குழு எஸ். ஜி. ரமேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் எம் .பி தண்டபாணி குறிஞ்சிப்பாடி பேரூர் குழு கன்வீனர் குழு மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment