கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தலித் மக்கள் குடியிருக்கும் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கொட்டி கரைத்து விட்டதை கண்டித்தும், அப்பகுதியில் குழந்தைகள் அந்த தண்ணீரை குடித்து உடல்நிலை பாதிக்கப்படுவதை கண்டித்தும், மலத்தை கொட்டி கரைத்தவர்கள் மீது குண்டார் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் அய்யாசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் சிவபிரகாசம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன், மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன் ஆகியோர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து, ஸ்டாலின் அரசே நடவடிக்கை எடு! தமிழக அரசே நடவடிக்கை எடு! என கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் பாக்யராஜ், மாவட்ட இணை அமைப்பாளர் அஜய், விருத்தாசலம் தொகுதி தலைவர் லட்சுமணன், தொகுதி துணைத் தலைவர் ஜெயபிரகாசம், தொகுதி பொருளாளர் சுதாகர் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment