கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராக பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருச்சி ஸ்ரீரங்கம் அதனைத் தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக பெருமாள் சொல்லக் கூடிய ஐக்கிய வராகனுக்கு அதிகாலை சுமார் 4 மணியிலிருந்து சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது.
சுமார் ஆறு மணி அளவில் ஸ்ரீ பூவராகப் பெருமாள் மூலவர் மேளதாளம் முழங்க சொர்க்கவாசல் என சொல்லக்கூடிய பரம பத வாசல் திறக்கப்பட்டது மூலவர் ஸ்ரீதேவி பூமாதேவி அலங்காரத்தோடு சொர்க்க வாசல் வழியாக வெளிவந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தேரோடும் நான்கு வீதிகளிலும் பிராமணர்கள் வேதங்கள் பாடி ஸ்ரீ பூவராக பெருமானை தோளில் சுமந்து சென்றனர் சென்ற மூன்று ஆண்டு காலமாக கொரோனா காலகட்டத்தினால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழா அறிவிப்பு பக்தர்கள் அதிகாலை நாலு மணி அளவில் கோவில் வாசலில் காத்துக் இருந்து வழிபட்டனர்
செய்தியாளர் கே பாலமுருகன் காட்டுமன்னார்கோயில்
No comments:
Post a Comment