அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் புரட்சிபாரதம் கட்சி சார்பில் மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் புரட்சிபாரதம் கட்சி சார்பில் மனு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை  மேலாளர் அவர்களிடம் புரட்சிபாரதம் கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர்பாலவீரவேல் அவர்கள் மனு


கடலூரில் இருந்து சுந்தரவாண்டி வழியாக  வான்பாக்கம் செல்லும் பேருந்து தடம்எண் 24.மற்றும் பண்ருட்டியிருந்து கீழ்அருங்குணம் கீழ்பாதி மேல்பாதி வழியாக சுந்தரவாண்டி  சென்று கடலூர் செல்லும் பேருந்து தடம் எண் 16B மீண்டும் இயக்கவேண்டும் என்று இன்று 20;01;2023 மனுகொடுத்தார். 



உடன் மாவட்டபொருளாளர், வழக்கறிஞர் PVசந்துரு, மாவட்டஇளைஞரணி தலைவர், புரட்சி சக்திவேல்  இருந்தார்கள். பண்ருட்டி வட்டம் சுந்தரவாண்டி, எய்தனூர், கீழ்பாதி,மேல்பாதி நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் பொதுமக்கள்  பள்ளி மாணவ செல்வங்கள் பெரிய நகரமான கடலூர் சென்றுதான் படிக்கவேண்டும் என்று இதனால் பலகட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை  வைத்தனர். 



இதனை ஏற்று அப்போதைய கால்நடைத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு MC தாமோதரன் அவர்கள் முயற்ச்சியால் கடலூரில் இருந்து சுந்தரவாண்டி  வழியாக நெல்லிக்குப்பம் நகரம் வரை பேருந்து தடம் எண்24 இயக்கப்பட்டது, மீண்டும் வான்பாக்கம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தத்தின் பேரில் அப்போதிய சட்டமன்றஉறுப்பினர் திரு சபா.ராஜேந்திரன்  அவர்கள் வான்பாக்கம் வரை செல்ல அனுமதி பெற்றுக்கொடுத்தார்.


இந்த பேருந்தானது காலை.மதியம்.இரவு என்று 3 முறை சென்று வந்தன இதனால் பொதுமக்கள்  மாணவ செல்வங்கள் மிகுந்த சந்தோஷத்திற்கு ஆளானர்கள். இந்த பேருந்து போதாது என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தத்தின் பேரில் அப்போது பிற்படுத்தப்பட்டதுறை அமைச்சராக இருந்த மாண்புமிகு  MRKபன்னீர்செல்வம் அவர்களின் முயற்ச்சினால் பண்ருட்டியிலிருந்து கீழ்அருங்குணம் குச்சிப்பாளையம், கீழ்பாதி, மேல்பாதி மார்க்கமாக சுந்தரவாண்டி  வழியாக கடலூர் நகரமும் கடலூரிலிருந்து சுந்தரவாண்டி வழியாக பண்ருட்டி செல்லும் தடம்எண் 16B பேருந்து தினமும் காலை 8.00மாலை 5.00மணியும்  இருவேலை கடலூரிலிருந்து சுந்தரவாண்டி  வழியாகவும் பண்ருட்டியிருந்து சுந்தரவாண்டி  வழியாகவும் இயக்கப்பட்டன.



இந்த இரு பேருந்துகள் பல வருடங்களாக இயக்கப்பட்டன பொதுமக்கள் பயன் அடைந்தார்கள் சரிவரவருமானம் வரவில்லை என்றும் நடத்துனர் ஓட்டுனரின் அலட்சியத்தாலும் இடையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன இதனால் பொதுமக்கள். மாணவ செல்வங்கள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் பல கிலோமீட்டர் சென்று பேருந்து ஏற வேண்டிய துர்பாக்கியமான நிலைமைக்கு ஆளானார்கள்  கடந்த மாதம் மீண்டும் வான்பாக்கம் பொதுமக்கள்  பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு வேல்முருகன்  அவர்களிடம் கோரிக்கை வைத்தத்தின் பேரில் தடம் எண்.24 கடலூரிலிருந்து பில்லாலி வழியாக வான்பாக்கம் செல்லுகின்றன. 


எனவே அய்யா அவர்கள் இதில் தனிகவனம் செலுத்தி சுந்தரவாண்டி  வழியாக சென்று  நிறுத்தப்பட்ட தடம் எண் 24, தடம் எண் 16B ஆகிய இரண்டு பேருந்துகளையும் மீண்டும் சுந்தரவாண்டி வழியாக இயக்கவேண்டுமென மனுகொடுத்தார்


No comments:

Post a Comment

*/