விருத்தாசலம் தொகுதி அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

விருத்தாசலம் தொகுதி அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து தலைமையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


ஒரு தலைவர் கூட்டம் நடத்த யோக்கியதை இருக்கா? என்று

ஓபிஎஸ்ஐ சாடி கேள்வி எழுப்பி பேசிய எம்எல்ஏ ஆ.அருண்மொழித் தேவன்.



கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேப்பூர் கூட்ரோடு பகுதியில்  விருத்தாசலம் தொகுதி அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழித் தேவன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில், விருத்தாசலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் VT.கலைச்செல்வன்  உள்ளிட்டோர் பங்கேற்று, கடந்த ஆட்சி காலத்தில் விருத்தாசலம்  தொகுதிக்கு உட்பட்ட மற்றும் வேப்பூர் பகுதியில் அதிமுக அரசின் செயல்திட்ட பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைத்து சிறப்புரை  ஆற்றினர்.இப்பொது கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


இப்பொது கூட்டத்தில்,மேற்கு மாவட்ட செயலாளர், எம் எல்ஏயுமாமான ஆ.அருண்மொழித் . சிறப்புரையாற்றி பேசுகையில்,


நாம் எல்லாம் விழிப்போடு இருக்க வேண்டும்,எந்த சூழ்நிலையிலும் அருமை எடப்பாடியார் அவர்களை தமிழக மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது,நாமெல்லாம் அதற்கு உறுதுணையாக இருக்கிறோம்,


நீ எத்தனை வேணுமானாலும் சொல்லிக்க ,அதிமுக நாலாச்சி, ஐந்தாகிச்சி என்று சொல்லு ஆனால்,என்றைக்கும் அண்ணா திமுக என்றால் இதுதான்.


ஒரு கூட்டம் போடுவதற்கு தகுதி இருக்காயா?தமிழ்நாட்டுல ஏதோ ஒரு இடத்துல,


கடலூர் மேற்கு மாவட்டத்தை பொறுத்த அளவிலே,நாங்கள் பட்டியலை கணக்கெடுத்த வகையிலே,ஒரு 60 பேர் தான் உறுப்பினர்னு சொன்னாலே ,இந்த ஓபிஎஸ் பக்கம்  போயிருக்கான். கணக்கெடுத்தாலே தெரியுது,எங்க கிட்ட கணக்கு தெளிவா இருக்கு.அதுல பாத்தீங்கன்னா 45 பேரு, 50 பேரு என்னைக்குமே இரட்டை இலைக்கு ஓட்டு போட மாட்டான்.


அந்த ஒபிஎஸ் கட்சிக்கு இன்னிக்கு இந்த அரசு சப்போட்டு,ஓ. பன்னீர்செல்வம் அசெம்பிளிக்கு வந்தா இன்னைக்கு வரைக்கும்,மு .க . ஸ்டாலினுக்கு எழுந்து நின்று வணக்கம் வச்சிட்டு,உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு வணக்கம் வச்சுட்டு தான் உட்காருவாரு.ஒரு தலைவர் கூட்டம் நடத்த யோக்கியதை இருக்கா?


எடப்பாடியார் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய அசைக்க முடியாத சக்தியாக,ஒட்டுமொத்த தமிழர்களுடைய ஆதரவை பெற்று மீண்டும் முதலமைச்சராக வருவார்.நல்லாட்சி தருவார்,வழக்கு மற்றும் இந்த பழி வாங்கும் போக்குக்கு எல்லாம் முடிவு கட்டுவார்.இந்த நல்ல நாள் புரட்சித்தலைவர் உடைய பிறந்த நாளில் நாமெல்லாம் சபதம் ஏற்போம் என்று பேசினார்.

No comments:

Post a Comment

*/