குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல். திருவிழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 January 2023

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல். திருவிழா.

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல். திருவிழா.


அனைவரும் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து சமத்துவத்தை ஏற்படுத்தி பொங்கல் விழா.


குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு  சமத்துவ பொங்கல் திருவிழா இன்று வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் துணை வட்டாட்சியர் சிவ சக்திவேல் வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, ஷோபா  தமிழ்நாடு  கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் நிகழ்ச்சிக்கு கடலூர் கோட்டாட்சியர் மாண்புமிகு அதியமான் கவியரசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

மேலும் விழாவில் வட்டாட்சியர் அவர்களின் துணைவியார் மகன் மற்றும் வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள்  உதவியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து புதிய மண்பானையில் பொங்கல் வைத்து  சமத்துவ பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.

No comments:

Post a Comment

*/