குடியரசு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தென்றல்மணி இளமுருகு தலைமை தாங்கினார். துணை தலைவர் சந்திராமுருகன், கிராம நிர்வாக அலுவலர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய கவுன்சிலர் ரேவதிஇளவரசன் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றி சிறப்புரையாற்றினார்.
மேலும் உசுப்பூர் ஊராட் சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி, ஆழ்துளை கிணறு அமைத்தல், குடிநீர் பிரச்சினை தீர்த்தல், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, உமா, முரளி, ஞானசவுந்தரி மற்றும் ஊராட்சி பணியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் இளமுருகு நன்றி கூறினார்
No comments:
Post a Comment