கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 74 .ஆவது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியில் தேசியக்கொடியை கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியர் முருகன் அவர்கள் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ராமலிங்கம் துணைத் தலைவர் அன்னக்கிளி இளந்திரையன் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் மனோகரன்
ஆசிரியர்கள் நிர்மலா . புவனேஸ்வரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு (B7) மாணவர்கள் ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் தேசத் தலைவர்களை பற்றி கலந்துரையாடி விழாவை சிறப்பித்தனர் விழாவில் மாணவ மாணவிகள் மகிழ்வுடன் நடனம். பேச்சுப்போட்டி. இசை நிகழ்ச்சி. கலை நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகள் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment