விருத்தாசலத்தில் 25ஆண்டுகளுக்கும் மேலாக வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் தேமுதிக கவுன்சிலர் ராஜ்குமார் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்களுடன் அதிரடி காட்டிய நகராட்சி ஆணையாளர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 January 2023

விருத்தாசலத்தில் 25ஆண்டுகளுக்கும் மேலாக வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் தேமுதிக கவுன்சிலர் ராஜ்குமார் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்களுடன் அதிரடி காட்டிய நகராட்சி ஆணையாளர்

விருத்தாசலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர், தேமுதிக கவுன்சிலர் ராஜ்குமார் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்களுடன் அதிரடி காட்டிய நகராட்சி ஆணையாளர்.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட வீடு, கடை, வணிக நிறுவனங்கள்  உள்ளிட்ட  அனைத்து தொழிற்கூடங்களுக்கும் நிலுவையில் உள்ள வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்துவரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள சுரேஷ் தியேட்டர் பெயரில் சொத்துவரி நிலுவையில் உள்ளதால் அதன் உரிமையாளர் ராஜனுக்கு 1995 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள சொத்துவரி ரூபாய் 8 லட்சத்தை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நோடீஸை பெற்றுக்கொண்ட தியேட்டர் உரிமையாளர் இதுநாள் வரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார், 



இந்த நிலையில்  நகரமன்ற தலைவர், 2வது வார்டு தேமுதிக கவுன்சிலர் ராஜ்குமார்  மற்றும் நகரமன்ற உறுப்பினர்களுடன் நகராட்சி ஆணையாளர் சேகர் நேரில் சென்று 24மணி நேர அவகாச நோட்டீஸ் ஒட்டப்பட்டது.


அதனை தொடர்ந்து விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வரி செலுத்தாத கடைகளிலும் வரி வசூலில் ஈடுபட்டனர், அப்போது அர்ச்சனா ஒட்டலின் முதல் தளத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதியை குறைந்த வாடகைக்கு எடுத்து அதில் ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களை தங்கவைத்தும் அதற்கு பல மாதங்களாக வாடகை செலுத்தாமால் நகராட்சிக்கு வரி ஏய்ப்பு செய்ததால் , நகராட்சி ஆணையாளர் சேகர் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோர் தலைமையில் அர்ச்சனா ஒட்டலின் முதல் தளத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர், அப்போது நகரமன்ற தலைவரை ஓட்டல் ஊழியர் புகைப்படம் எடுத்ததால் ஓட்டல் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

*/