கடலூர் மாவட்ட மக்கள் வழங்கிய நிலங்களையும் அதில் உள்ள நிலக்கரி வளங்களையும் ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட என்எல்சி இந்தியா நிறுவனம்
கடலூர் மாவட்டத்தில் 49 கிராமங்களில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகத்தின் துணை உடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது
இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியேற வலியுறுத்தி பிரச்சார நடைப்பயணத்தை மேற்கொண்டார்
வடலூர் ரயில்வே கேட்ட்டிலிருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் வடலூரில் உள்ள முக்கிய வீதி வழியாக சென்று பின்னர் வடலூர் சபை அருகே நிறைவு பெற்றது
மேலும் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் டாக்டர் அன்புமணி அவர்கள் பேசுகையில்
கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை என்.எல்.சி நிறுவனம் கையகபடுத்தப்படுவதை தடுக்கவும்
நிலக்கரியை வெட்டி எடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிர்வாகம் வெளியேறவும் பாட்டாளி மக்கள் கட்சி எப்பொழுதும் துணை நிற்கும் என பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்
இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மகளிர் அணி உறுப்பினர்கள் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பெருதிரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment