நெய்வேலி என்.எல்.சியில் குடியரசு தின விழா நடைபெற்றது இதில் என்.எல்.சி சேர்மன் பிரசன்னா குமார் மோட்டுபள்ளி கொடியேற்றி வைத்தார் பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
நெய்வேலி என்எல்சி யில் ஒரு நாளைக்கு 17,171 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் விரைவில் புதிதாக பழுப்பு நிலக்கரியில் இருந்து ஆண்டுக்கு 4 லட்சம் டன் மெத்தனால் திரவம் தயாரிக்கும் திட்டம், நாள் ஒன்றுக்கு 290 டன் திறன் கொண்ட பழுப்பு நிலக்கரியில் இருந்து டீசல் உற்பத்தி செய்யும் ஆலை, மற்றும் சுரங்கம் மேல்மண்ணை கட்டுமானத்திற்கு உதவும் மணலாக மாற்றும் ஆண்டிற்கு 4 லட்சத்து 20 ஆயிரம் டன் திறன் கொண்ட ஆலை என மூன்று புதிய திட்டங்களை நெய்வேலியில் அமைக்க உள்ளனர்.
நெய்வேலியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பழுப்பு நிலக்கரியில் இயங்கும் 2×660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது அனல் மின் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
என்று இவ்வாறு பேசினார் இந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment