முதியவரிடம் பணம், நகை, வீட்டு மனை பத்திரம் மூத்த மகன் பறிப்பு. Hello Senior காவல் உதவி எண்ணின் மூலம் புகார்.! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 December 2022

முதியவரிடம் பணம், நகை, வீட்டு மனை பத்திரம் மூத்த மகன் பறிப்பு. Hello Senior காவல் உதவி எண்ணின் மூலம் புகார்.!


நெய்வேலி டவுன்ஷிப்  18 வது வட்டத்தை சேர்ந்த தனலட்சுமி கணவர் பெயர் கோவிந்தசாமி 75 வயதான மூதாட்டி என்பவர் Hello Senior காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது கணவரது ஓய்வூதிய பணம் ரூபாய் 1 லட்சம், 2 பவுன் நகை,மற்றும் வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை தனது மூத்த மகன் அன்புவேல் வாங்கி வைத்துக்கொண்டு தன்னிடம் தர மறுப்பதாக புகார் தெரிவித்திருந்தார். 


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் நெய்வேலி டவுன்ஷீப் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. ஜெயதேவி அன்பு வேல் மீது சி.எஸ். ஆர் பதிவு செய்து, விசாரணை செய்தார் விசாரணையில் மூதாட்டி தனலட்சுமியின் பணம் ரூபாய் 1 லட்சம், 2 பவுன் நகை மற்றும் வீட்டு மனை பத்திரம் இருந்தது தெரியவந்ததையடுத்து உதவி ஆய்வாளர் ஜெயதேவி தலைமையிலான காவல்துறையினர். அன்புவேலிடமிருந்து பெற்று தனலட்சுமி யிடம்  ஒப்படைக்கப்பட்டது.


பணம், நகை மற்றும் வீட்டு மனை பத்திரத்தை மீட்டு கொடுத்த காவல்துறைக்கு மூதாட்டி தனலட்சுமி நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*/