நெய்வேலியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி டி வி தினகரன் 60வது பிறந்தநாள் விழா.
மக்கள் செல்வர் டிடிவி தினகரன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள வேலுடையான் பட்டு முருகன் திருக்கோயிலில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் டாக்டர் .ஏ .பி .ஆர்.பக்தரட்சகன் தலைமையில் நெய்வேலி நகர கழக செயலாளர் கே.வேலுச்சாமி ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும் பண்ருட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாவைகுளம், காடாம்புலியூர், வேலங்குப்பம், பிள்ளையார் குப்பம், மாம்பட்டு ஆகிய இடங்களில் பண்ருட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் காடாம்புலியூர் எஸ்.கார்த்திகேயன் ஏற்பாட்டில் கடலூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் மருத்துவர் ஏ. பி. ஆர்.பக்தரட்சகன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார் .மற்றும் கடலூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில , மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், மாவட்ட சார்பணி செயலாளர்கள், நகர கழக செயலாளர் ,பேரூர் கழகச் செயலாளர், ஊராட்சி கழக செயலாளர் ,மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment