விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பனை விதைகள் நடும் விழா.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கோமங்கலம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மற்றும் கோமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் விருத்தாசலம் அருகேயுள்ள கோமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையில் 450 பனை விதைகள் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கோமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் கலந்து கொண்டார்.
ஊராட்சி செயலர்,தங்கதுரை, திட்டம் ஒருங்கிணைப்பாளர் காத்தமுத்து, பணி தள பொறுப்பாளர் ஜெயாராசாத்தி, மற்றும் ஜே.எஸ்.வி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.

No comments:
Post a Comment