சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு கருப்பசாமி கோவிலில் நடந்த மஹா அதர்வண தேய்பிறை அஷ்டமி வேள்வி.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு விநாயகபுரத்தில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு 83 அடி உயர பிரத்தியங்கரா தேவி சிலை முன்பு மகா அதர்வண தேய்பிறை அஷ்டமி வேள்வி நடைபெற்றது. மிகப்பெரிய யாக குண்டத்தில் தீயை மூட்டி யாகத்தீயானது வானை நோக்கி மலமலவென எரியும் தீயில் தனிநபரின் தோஷம் விலகி நன்மை நடந்திட கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் வேண்டுதலை மனதில் நிறுத்தி கடவுளை வேண்டி நவதானியத்தை தங்கள் தலையைச் சுற்றி எரியும் வேள்வித்தியில் போட்டனர்.
உலக நன்மைக்காகவும், எங்கும் அமைதி நிறைந்திடவும், அன்பு சகோதரத்துவம், சமத்துவம் நிலவிடவும், ஏவல், பில்லி சூன்யம் விலகிடவும் வேண்டி நடைபெற்ற இந்த வேள்வியில் பலவித மந்திர ஸ்லோகங்கள் முழங்கப்பட்டு நவக்கிரக துதிகள் துதிக்கப்பட்டு 108 யாகசாலை பொருட்கள், நவகிரகத்திற்குறிய நவ தானியங்கள், காய்ந்த மிளகாய் வற்றல் என டன்னுக்கும் அதிகமான பல்வகை பொருட்களை வேள்வியிலிட்டு பூஜைகள் நடைபெற்றன.
இந்த வேள்வியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்றனர். பூஜையின் முடிவில் பிரித்தியங்கராதேவிக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.


No comments:
Post a Comment